மதுரையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டிடத்தை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Published Date: January 2, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிவீதியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர், துணை மேயர் உள்பட பலர் உள்ளனர்.

Media: Murasoli